Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்-மீண்டும் இணையும் சுசீந்திரன் , யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி...

On March 30, 2018
DZX6DsSVwAEDbdU
Share
சுசீந்தரன் பாண்டிய நாடு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். இவர் வெண்ணிலா கபடி குழு, ஜீவா திரைப்படத்தில் கபடி மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளை மையமாக வைத்து படத்தை இயக்கியிருந்தார் தற்போது அவர் புது முகங்களை வைத்து ’ஏஞ்சலினா’என்ற படத்தை இயக்கி முடித்து. அதை ஜுன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து, கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று எடுக்க உள்ளார். இந்த  திரைப்படத்தில் கதாநாயகனாக ரோஷன்  நடிக்கிறார் . கதாநாயகனின் இளம்  பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார் . இவர் இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய ” ஆதலால் காதல் செய்வீர் ” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ” ஆதலால் காதல் செய்வீர் ” படத்துக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு சுசீந்திரன் இனையும் படம் இது . இப்படத்தில் நடிக்க நிஜ கால்பந்தாட்டக்காரர்களை இயக்குநர் சுசீந்திரன் தமிழகம் முழுவதும் தேடி வருகிறார்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.