Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிரிட்டனின் தேசிய விருதை வென்றது "மெர்சல்" திரைப்படம்..

On March 30, 2018
Mersal-Movie-Stills-1_14032
Share
பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெற்றியை தட்டிச் சென்றுள்ளது.
விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகும் முன்பே, டீசர், டிரைலர், பாடல்கள், என பல சாதனைகளை படைத்தது. தற்போது இப்படத்திற்கு பிரிட்டன் நாட்டில் பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.