பிரபல கிரிக்கெட் வீரர்களுக்கு இரண்டு கோடி சம்பளமா?..

பிரபல கிரிக்கெட் வீரர்கள் இரண்டு கோடி சம்பளம் வாங்க உள்ளனர் .ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஏ கிரேடில் இடம் பிடித்துள்ளனர்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தனது சம்பள ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய 32 வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
இந்த பட்டியலில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் புஜாரா,ஜடேஜா மற்றும் முரளி விஜய் ஆகியோர் கிரேட் 1 -இல் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கிரேடில் அடிப்படை சம்பளம் ரூபாய் 2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கிரேடு 'ஏ'-யில் கோஹ்லி, தோனி, அஷ்வின், ரகானே, புஜாரா, ஜடேஜா, முரளி விஜய் ஆகியோர் ரூ.2கோடி சம்பளம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிரேடு'பி'-யில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், விரிதிமன் சகா, பும்ரா, யுவராஜ் சிங்.கிரேடு 'சி' (ரூ. 50 லட்சம்): தவான், அம்பதி ராயுடு, அமித் மிஸ்ரா, மணிஷ் பாண்டே, அக்சர் படேல், கருண் நாயர், ஹர்த்திக் பாண்ட்யா, ஆஷிஸ் நெஹ்ரா, கேதர் ஜாதவ், யுவேந்திர சாகல், பார்த்திவ் படேல், ஜெயந்த் யாதவ், மந்தீப் சிங், தவால் குல்கர்னி, ஷர்துல் தாகூர், ரிஷாப் பண்ட் ஆகியோர் ரூ. 1 கோடி சம்பளம் வாங்குகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
