Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டோல்லிவூட் நடிகர் ரவி தேஜா ரசிகர்களின் ஆதரவுடன் இயக்குனராகிறார்!..

On March 23, 2017
ravitheja
Share
ravitheja நடிகர் ரவி தேஜா, தனது ரசிகர்களின் ஆதரவுடன் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார். டோலிவுட்டின் முன்னணி மாஸ் ஹீரோவான ரவி தேஜா தனது திரை உலக பயணத்தை உதவி இயக்குனராக துவக்கியவர். பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவி தேஜா நடிகராக மாறி பின்னாளில் டோலிவுட்டின் மாஸ் நடிகராக உயர்ந்தார். ரவி தேஜாவின் சமீபத்திய படங்கள் தோல்வியைத் தழுவின. இதற்கிடையில் இயக்குனர் விக்ரம் ஸ்ரீகொண்டா இயக்கத்தில் ‘டச் சேஷி சூடு’ மற்றும் இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கத்தில் ‘ராஜா தி கிரேட்’ போன்ற படங்களிலும் ரவி தேஜா நடிக்க திட்டமிட்டுள்ளார். இப்படங்களை முடித்த பின்னர் ரவி தேஜா நடிப்பதை நிறுத்தி வைத்துவிட்டு திரைப்படங்களை இயக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக தயார் செய்துள்ள கதைகளுக்கு திரைக்கதை அமைக்கும் பணிகளிலும் ரவி தேஜா ஈடுபட்டுள்ளார். ரவி தேஜாவின் இயக்குனராகும் முடிவு அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.