Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'பவர்பாண்டி பட டிரெய்லர்'ஒரு மில்லியன் வியூவர்ஸ்!- மகிழ்ச்சியில் தனுஷ்..

On March 25, 2017
dhanush-pp-759
Share
dhanush-pp-759 தனுஷின் பவர்பாண்டி பட டிரெய்லரை ஒரே நாளில் ஒரு மில்லியன் ரசிகர்கள் கண்டுரசித்துள்ளனர் இக்காரணத்தினால் தனுஷ் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக வலம் வரும் தனுஷ், பவர் பாண்டி படத்தை இயக்கி இயக்குனராக உருவெடுத்துள்ளார். தான் நடித்து வந்த சில படங்களிலேயே பேடு பேப்பரை கையில் எடுத்துக்கொண்டு உதவி இயக்குனராக சுற்றிக்கொண்டிருந்த தனுஷ், தங்க மகன் படத்தில் நடித்த போது, அந்த படத்தின் இயக்குன் இல்லாத போது அவரே தனித்து நின்று படப்பிடிப்பை நடத்தினார். அதையடுத்து, தான் எழுதி வைத்திருந்த பவர்பாண்டி கதையை தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய முதல் படத்தின் நாயகன் ராஜ்கிரணையை நாயகனாக வைத்து தனுஷ் முழுநேர இயக்குனராகியுள்ளார். தற்போது அந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது. பவர்பாண்டி டிரெயிலர் வெளியிடப்பட்ட ஒரே நாளில் மில்லியன் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். கிட்டத்தட்ட முன்னணி ஹீரோ படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தனது பவர்பாண்டி படத்திற்கு கிடைத்துள்ளதால், இயக்குனர் தனுஷ் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.