Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னையில் புதிய மாநகர காவல் ஆணையராக கரன் சின்ஹா நியமனம்!

On March 25, 2017
karan-sinha
Share
karan-sinha சென்னையில் மாநகர காவல்துறையின் புதிய ஆணையராக கரன் சின்ஹாவை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் முன்னால்வரும் பொதுச்செயலரும் ஆனா ஜெயலலிதா மறைவையடுத்து காலியான அவரது ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து, மனுக்கள் மீதான பரிசீலனையும் நடைபெற்று முடிந்துள்ளது. இதனிடையே, சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜை பணியிடமாற்றம் செய்யக்கோரி, தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்தது. இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், ஜார்ஜை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும், புதிய ஆணையர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை மாநகர காவல்துறையின் புதிய ஆணையராக, சிபிசிஐடி பிரிவில் கூடுதல் டிஜிபியாக இருந்த கரன் சின்ஹாவை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.