Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பல வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் கால்தடம் பாதிக்கும் பிரபல நடிகை

On September 28, 2021
Amala Still
Share

30 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் தமிழ் திரையுலகில் கால்தடம் பாதிக்கும் நடிகை அமலா.

தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, மாப்பிள்ளை, வெற்றி விழா, மவுனம் சம்மதம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். 1991-ல் 'கற்பூர முல்லை' படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார்.

30 வருடங்களுக்கு பிறகு தற்போது 'டிரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிக்கும் "கணம்" படத்தின் மூலம் தமிழில் நடிக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S.R.பிரகாஷ்பாபு மற்றும் S.R.பிரபு இப்படத்தை தயாரிக்கின்றனர். ஸ்ரீகார்திக் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் கடைசியாக 2015-ல் வெளியான ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார்.

6 வருடங்களுக்கு பிறகு தற்போது "கணம்" படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதில் ஷர்வானந்த் ஜோடியாக ரீதுவர்மா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.