Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அதிரடி நாயகனாக அவதாரமெடுக்கும் நடனப்புயல்

On September 27, 2021
Prabu Deva New
Share

நடனப்புயல், நடிகர், இயக்குநர் என பன்முகங்களை கொண்ட பிரபுதேவா இப்போது ஆக்சன் நாயகனாக உருமாறுகிறார்.

'ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்' என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ தயாரிக்கும் படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ரியாஸ் கானின் வாரிசும், நடிகருமான ஷாரிக் ஹாஸன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இப்படத்தை இயக்குகிறார். முழு நீள ஆக்சன் படமாக உருவாகும் இப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது.

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் கலை இயக்கத்தை மாய பாண்டி கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் பேசுகையில்,

"பிரபுதேவா நடிப்பில் மாஸான முழு நீள ஆக்சன் படமாக தயாராகிறது. இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சி, ரசிகர்களின் கண்களுக்கு புதுமையானதாக இருக்கும்" என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.