பலியானோரின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்வு!

பொறையார் பணிமனை கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3-பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.தற்போது சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியானதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
 ,
காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடத்துநர் வெங்கடேசன் மரணமடைந்துள்ளார்.
இந்நிலயில் பொறையார் பணிமனை மேற்கூரை கட்டிடத்தை முழுமையாக இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
இதனையடுத்து சீர்காழி பேருந்து நிலையத்தில் ஊழியர்கள் , பஸ்களை இயக்காமல் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பொறையார் மற்றும் மயிலாடுதுறை பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படவில்லை.
பொறையாறில் ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.எப்.ஐ.ஆர். பதிவு செய்யாமலேயே இறந்தவர்கள் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
