பத்மாவத் எதிர்ப்பு கலவரத்திற்கு பாஜகதான் காரணம்

பத்மாவத் பட ரிலீசுக்கு எதிராக நாடு முழுவதும் வெறுக்கதக்க வகையில் நடந்து வரும் கலவரத்திற்கும், தீவைப்பு சம்பவங்களும் பா.ஜ க, தான் காரணம் என காங்., தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அரியானா மாநிலம், குர்கிராமில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
. வன்முறையும், வெறுப்புணர்வும் சமூகத்தை பலவீனப்படுத்தும் ஆயுதங்கள். வன்முறையையும், வெறுப்புணர்வையும் பயன்படுத்தி பா.ஜ.க, ஒட்டுமொத்த நாட்டையும் கொளுந்துவிட்டு எரிய வைக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.மேலும், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க, அரசு சட்ட ஒழுங்கை நிலைநாட்ட தவறிவிட்டது என காங்., குற்றம்சாட்டி உள்ளது. அப்பாவி குழந்தைகள், பயணிகள் தாக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
