Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

உதயநிதி அரசியலில் குதிக்கப் போவதாக அறிவிப்பு..! திமுகவின் சீனியர்கள் அதிர்ச்சி..!

On January 25, 2018
1udhay
Share
1udhay திமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடத் தயார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அண்மையில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின் தான் அரசியலுக்க வருவதற்கான நேரம் வந்துவிட்டதாக கூறினார். ஒரு கல் ஒரு கண்ணாடி, சரவணா, மனிதன், நண்பேன்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆலந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு திமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றார். மேலும் தான் பிறந்ததில் இருந்தே அரசியலில்தான் இருக்கிறேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் உதயநிதி அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்திருப்பது திமுகவின் சீனியர்களை அதிர வைத்திருக்கிறது. காலங்காலமாக கொள்கை பேசி உழைத்துவிட்டு உட்கார்ந்திருக்கும் அடிப்படைத் தொண்டனுக்கு திமுகவில் இனி என்ன மரியாதை என்ற விரக்தியை தீவிர திமுகவினரே சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். திமுக தலைமை இதை கருத்தில் எடுத்துக் கொண்டு, தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அண்ணாவுக்குப் பிறகு திமுகவை எப்படி கருணாநிதி கட்டிக் காத்தாரோ, அதே போல தற்போதைய தலைமையும் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், பல பின்னடைவுகளை கட்சி சந்திக்க நேரிடும் என்பது தீவிர திமுகவினரின் ஆதங்கமாக உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.