நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் !

இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக பிரதமர் மோடி இன்று நேபாள தலைநகர் காத்மண்டு சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், ஜானக்பூர் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ஜானகி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன், அந்நாட்டு பிரதமர் கே.பி. ஒலி உடன் சென்றார். நேபாள பிரதமருடன், சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்தும் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும் நேபாளில் ஹைட்ரோ எலெக்ட்ரிக் திட்டம், நேபாளின் பழமையான நகரமான ஜனக்புர், பஸ் போக்குவரத்து ஆகியவற்றை துவக்கி வைக்கிறார். பின்னர் ஜனக்புர் நகர மேயர் ஏற்பாடு செய்துள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
