அட்லீயை விட்டு இயக்குனர் மோகன் ராஜாவுடன் கூட்டணியில் இணையும் தளபதி !

விஜய் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர். .ரஹ்மான் இசையமைக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் விஜய் அடுத்ததாக அட்லீ படத்தில் நடிப்பார் என்று செய்திகள் உலா வந்தது. ஆனால் தற்போது அது மாறிவிட்டது. இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே இயக்குனர் மோகன் ராஜா விஜய்யை சந்தித்துக் கதை சொல்லியதாகவும் அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் பேச்சுகள் உலா வந்தன. இந்நிலையில் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ''டிஸ்கஷனின் இறுதி நாள், என்ன ஒரு அனுபவம், எண்ணங்களை தாளில் எழுதுவது எப்போதும் பேரின்பமே" என பதிவிட்டுள்ளார். இதனால் மோகன்ராஜா படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகி உள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
