நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் கைது!..

இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் சிலரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, சர்வதேச கடல் எல்லையை மீறி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி, இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்னாள் கூட , ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் ஒருவரை சுட்டுக் கொன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
அவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். மீனவர்களின் எண்ணிக்கை, அவர்களின் சொந்த ஊர் உள்ளிட்ட இதர விவரங்கள் தெரியவில்லை.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
