Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடிகர் தனுஷ் மீது மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்!..

On March 26, 2017
dhanush
Share
dhanush சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். மிகவும் பிரபலம் அடைந்துள்ள அவரை, தங்களின் மகன் என்று சிவகங்கையை சேர்ந்த தம்பதியினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். தனுஷ் எங்களின் மகன் என்றும் சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிவிட்ட தனுஷ் தற்போது பெரிய ஹீரோவாகிவிட்டார் என்றும் வழக்கு தொடர்ந்தனர். அதனால் தங்களுக்கு தனுஷ் மாதம் குறிப்பிட்ட உதவித்தொகையை வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். தனுஷூக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் வெளியான மருத்துவ அறிக்கையில் தனுஷ் உடலில் இருந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்ததை அடுத்து தனுஷூக்கு கடும் நெருக்கடி உண்டானது. இந்நிலையில் சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப்போன தங்களின் மகன் திரும்ப வந்து காவல்துறையிடம் ஆஜராகிவிட்டான் என்று சிவகங்கை தம்பதியினர் கூறியுள்ளனர். இதனால் தனுஷின் பிரச்னை தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.