Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நெஞ்சைபதற வைக்கும் கொரோனா பலி எண்ணிக்கை : இந்தியாவின் நிலவரம் இதோ..

On June 16, 2020
Coronavirus_person
Share

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,091 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,667 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 380 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம்  அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 9900 பேர் உயிரிழந்த நிலையில் 1,80,013 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,10,744 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4128 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 56,049 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது  இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 46,504 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை  479 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 25,344 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 42,829 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 1400 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 16,427 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.