எளிமையாக நடைபெற்ற பினராயி விஜயனின் மகள் திருமணம் - உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி..

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருபவர் . இவருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவர் பி.ஏ.முகமது ரியாஸுக்கும் இன்று காலை 10:30 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள கிளிஃப் ஹவுஸில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.கேரள முதலமைச்சரின் இல்லமான கிளிஃப் ஹவுஸ் முதல் முறையாக திருமணத்திற்கான இடமாக மாறியுள்ளது. தற்போதுள்ள கோவிட் 19 வழிகாட்டுதல்களின்படி 50-க்கும் குறைவான நபர்களை மட்டுமே கொண்டு திருமண விழா நடத்தப்பட்டது. இரண்டு குடும்பங்களைத் தவிர, ரியாஸ் மற்றும் வீணா இருவரின் நெருங்கிய நண்பர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
