Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நா.முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதிய திரைப்படம் எது தெரியுமா..?

On February 3, 2018
IMG_0437
Share
IMG_0437 'வி மூவிஸ்' சார்பில் விஜய் விக்காஷ் தயாரிப்பில் ராஜ நாகஜோதி இயக்கியிருக்கும் படம் 'துலாம்' . இப்படம் போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் வாழ்வியலையும், மனச்சாட்சி உள்ள மனிதர்கள் இன்னும் நிறையபேர் உள்ளார்கள் என்பதையும் விவரிக்கும் படம் தான் இந்த துலாம் . இப்படத்தில் நாயகனாக புதுமுகம் நிவாத் நடிக்க நாயகியாக டெப்லினா ஜாக்சி நடிக்கிறார்கள் . இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பொன்னம்பலம், மனோபாலா, பாலாசிங் , மோனா பிந்ரே மற்றும் 'ஈரமான ரோஜாவே' புகழ் சிவா ஆகியோர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் சென்னை, பாண்டிச்சேரி மற்றும் ஊட்டியில் நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. இதில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் விஜய் விக்காஷ் நடிக்கிறார். கானா பாலா ஒரு பாடலை எழுதி பாடி நடித்தும் உள்ளார். இந்த படத்தில் தான் நா.முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வி மூவிஸ்' சார்பில் விஜய் விக்காஷ் தயாரிப்பில் ராஜ நாகஜோதி இயக்குகிறார். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவில் சுரேஷ் அர்ஷ் படத்தொகுப்பு செய்கிறார்.அலக்ஸ் பிரேம் நாத் இசையில் நடனப்பயிற்சி அளிக்கிறார் ஷங்கர் மற்றும் கலை ஜெய வர்மா புகைப்படம் ஷிவா அவர்களால் பதிவிடப்படுகிறது. சண்டைப்பயிற்சி அளிக்கிறார் ரமேஷ், சசி &, சசி டிசைனர், இப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளனர் நா.முத்துக்குமார், கானா பாலா , நதி விஜயகுமார். மேனேஜர்: குணசேகரன் ,தண்டபாணி மேனேஜர்: குணசேகரன் ,தண்டபாணி

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.