Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நாளை வெளியாகவுள்ளது ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் !

On May 15, 2018
exam-results-students_2_759
Share

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.

கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கிய ப்ளஸ் 2 தேர்வுகள் ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. இதனை தமிழ்நாடு, புதுச்சேரியில் தனித்தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தன. பின்னர், மதிப்பெண்களை கம்ப்யூட்டர்களில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து மதிப்பெண்கள் சரிபாக்கும் பணியும் நடைபெற்றது. எல்லாம் முடிவடைந்த நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைத்தளங்களில் தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அல்லது மேற்கண்ட இணையதளங்களுக்கே சென்று தேர்வு முடிவினை அறிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.