Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நாம்தமிழர் கட்சியினர் போராட்டம்… 150 பேர் கைது…!

On January 25, 2018
nam tamilar
Share
nam tamilar சென்னை ஐ.சி.எப். பஸ் நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் திடீர் போராட்டம் நடந்தது. நாம்தமிழர் கட்சியின் வில்லிவாக்கம் மாவட்ட செயலாளர் வாகை வேந்தன் தலைமையில் சுமார் 50 பேர் பஸ்சுக்குள் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டன. கோயம்பேடு பஸ் நிலையம் முன்பு புரட்சிகர மாணவர் முன்னணி சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகே மாணவர் பெருமன்றம் சார்பில் 50 பேர் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவலறிந்து வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். சென்னையில் இன்று 3 இடங்களில் நடந்த போராட்டத்தில் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.