Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்: குடியரசு தின வாழ்த்து..

On January 25, 2018
1200px-RamNathKovind
Share
1200px-RamNathKovind எத்தனை தடைகள் வந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என ஜனாதிபதி தனது குடியரசு தின உரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டை காக்கும் முப்படை வீரர்களுக்கும், வளப்படுத்தும் விவசாயிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு தூணாக இருக்கும் இளைஞர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை நினைவு கூறும் நேரம் இது. நாட்டு மக்கள்தான் ஜனநாயகத்தை உருவாக்குகிறார்கள். ஒவ்வொருவரும் ஜனநாயகத்தின் ஒரு அங்கம் மட்டுமல்லாமல், ஜனநாயகத்தின் தூண்களாக திகழ்கிறார்கள். கல்வியை ஊக்குவிப்பதற்காக நாம் நிறைய பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். புதுமையான குழந்தைகளால் தான் புதுமையான இந்தியாவை கட்டமைக்க முடியும் என்று உரையாற்றினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.