10 வருடங்கள் ஆட்சி
நான் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக சோனியாவுடன் பணியாற்றியுள்ளேன். 10 வருடங்கள் பிரதமராக இருந்தபோது சோனியா அறிவுரையை பெற்று செயலாற்றினேன். எங்களது 10 வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக இருந்தது.  ,
சோனியாவின் வழிகாட்டுதல் படி எங்கள் அரசு பல சிறப்புமிக்க முடிவுகளை எடுத்தது. ராகுல் காந்தியும் திறமையானவர். நீண்ட காலமாக அவர் அரசியல் பயிற்சியில் உள்ளார்.
காங்கிரசின் பல்வேறு செயல்பாடுகளை ராகுல் மேற்கொண்டிருந்தார். நாட்டின் அரசியலில் சில இடையூறுகள் தென்படும் இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



