காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுலுக்கு கமல் வாழ்த்து!

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ராகுல்காந்திக்கு கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி தலைமை பண்பை ஏற்க வேண்டும் என்று 89 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரிவு தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ராகுல் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
[embed]https://twitter.com/ikamalhaasan/status/941909045828399105[/embed]
இதையடுத்து ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்தனர். பின்னர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் முன்னிலையில் ராகுல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் கூறுகையில், காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். உங்களை பற்றி உங்கள் பதவி விவரிக்காது, ஆனால் நீங்கள் உங்கள் பதவியை விவரிக்கலாம்.
உங்கள் வீட்டு பெரியவர்களை பார்த்து நான் பெருமைப்பட்டுள்ளேன். நீங்களும் கடுமையாக உழைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் தோள்களுக்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது என்று கமல் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.

