நாகரிகம் தெரியாத விஜயேந்திரர்: விஜய் சேதுபதி..

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசியகீதம் ஒலிக்கும்போது மட்டும் எழுந்துநின்று மரியாதை செலுத்திய விஜயேந்திரர் மீது பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்து ஓலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 23-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது காஞ்சி சங்கர மடம் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். ஆனால் தேசிய கீதத்தின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார் என தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர்,நெட்டிசன்கள், பொதுமக்கள் என பலதரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் கண்டுகொள்ளாத்தன்மை குறித்தும் பேசினார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்துப் பேசிய அவர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
