Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தலைவர்களை பார்க்க சென்ற நடிகர் கமல்ஹாசன்.. அரசியலுக்கு வருமாறு அழைத்தார்..

On January 28, 2018
201712201335547949_Kamal-Haasan-entry-into-politics-after-completing-2-movies_SECVPF
Share
201712201335547949_Kamal-Haasan-entry-into-politics-after-completing-2-movies_SECVPF சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மாணவர்கள் நடத்திய கலந்துரையாடலில் கமல் கூறுகையில் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் வாருங்கள் என்றுதான் சொல்ல வந்துள்ளேன். நாட்டு நடப்பை அறிந்து கொள்ளுங்கள். நான் தனியாக நிற்க மாட்டேன், நீங்கள்தான் நான். தலைவராக இங்கு வரவில்லை, தலைவர்களை பார்க்கவே இங்கு வந்துள்ளேன். அரசுக்கு மது விற்பதுதான் வேலையா. உங்களுக்கு கிடைத்த கல்வி பிறருக்கு கிடைக்காவிட்டால் கோபப்படுங்கள். காமராஜர், பெரியார், எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரை எனக்கு பிடிக்கும். அரசியல் தலைவர்கள் தங்களது ஏழ்மையை மட்டுமே சரி செய்து வருகின்றனர். நேர்மையாக இருக்க முடியுமா என்று கேட்கக் கூடாது, நேர்மையாக இருக்க முடியும் என்று நம்ப வேண்டும். அரசியலுக்கு மாணவர்களை வருமாறு நடிகர் கமல் ஹாசன் அழைத்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.