Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நயன்தாராவுக்கு பணத்தை கொட்டிய தயாரிப்பு நிறுவனம்!

On March 3, 2017
nayandara-11
Share
nayandara-11 இதுவரை எந்த தயாரிப்பு நிறுவனமும் கொடுக்காத சம்பளத்தை கொடுத்து நயன்தாராவை தனது தயாரிப்பு படத்திற்கு ஈராஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.நடிகை நயன்தாரா ‘அறம்’, ‘டோரா’, ‘கொலையுதிர் காலம்’ என கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவமுள்ள படங்களில் நடித்து வருகிறார். தற்போது நயன்தாராவை, ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இப்படத்தை மிஷ்கினின் உதவி யாளர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்குகிறார். படத்திற்கு செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதியில் துவங்கவுள்ளது. இப்படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட உள்ளது.கதைப்படி நயன்தாராவுக்கு பிரான்ஸில் பணிபுரியும் ஜர்னலிஸ்ட் கேரக்டர் பெண்ணாக அதுமட்டும்மள்ளது சிறு வயதில் தொலைத்த தன் குடும்பத்தைத் தேடி பல நாடுகளுக்கு பயணம் செய்கிறார் நயன்தாரா. கடைசியாக தன்னுடைய பெற்றோரை கண்டுபிடிக்க தமிழ்நாட்டிற்கு வருவதுபோல் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ், ஜெர்மனி, செக் குடியரசு, போலந்து, மங்கோலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். நயன்தாராவுக்கு இதுவரை யாரும் கொடுக்காத அளவுக்கு பெரிய சம்பளத்தை ஈராஸ் நிறுவனம் வழங்கி இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.