Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜெ, மறைவில் சந்தேகம் தீரும் வரை போராட்டம் ஓயாது - ஒ.பி.எஸ்.

On March 3, 2017
ops_new1_11312
Share
ops_new1_11312 தமிழக முன்னால் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தீரும் வரை போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., அணியினர் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பேசியதாவது: ஜெயலலிதா மறைந்த பின்னர் கட்சியையும் ஆட்சியையும் உங்களால் தான் காப்பாற்ற முடியும் என சிகலா கூறினார். ஆனால் சசிகலாவை முதல்வராக்க தினகரன் விருமபுவதாக என்னிடம் விஜயபாஸ்கர் கூறினார். நான் முதல்வராக இருந்த போது அமைச்சர்கள் திட்டமிட்டே குழப்பத்தை ஏற்படுத்தினர். பின்னர் நான் முதல்வர் முதல்வர் பதவியிலிருந்து விலக பல தரப்பிலும் எனக்கு நெருக்கடி வந்தது.பின்னர் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் என்னை மதிக்கவில்லை.எதை சொன்னார்களோ அது நடக்கவில்லை. அவசியமின்றி அரசை மாற்றினார்கள். கட்சியும், ஆட்சியும் தற்போது ஒரிடத்தில் இல்லை. இத்தகைய சூழலில் ஜெயலலிதா மரணத்தில் தமிழக மக்களுக்கு சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். சந்தேகம் தீரும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.