Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நண்பர்கள் மோதிக்கொள்ளும் சூழ்நிலை!

On October 30, 2017
richie
Share
richie ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவின் பாலி. அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய இந்தப் படம், தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியானது. நஸ்ரியா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து நேரடியாக ஒரு தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் நிவின் பாலி. ‘ரிச்சி’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தை, புதியவரான கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். நட்ராஜ் என்கிற நட்டி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். thirutduppayale இந்தப் படம், டிசம்பர் முதல் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில்தான் பாபி சிம்ஹாவின் ‘திருட்டுப்பயலே 2’ படமும் ரிலீஸாகிறது. இதன்மூலம் நண்பர்களான பாபி சிம்ஹா, நிவின் பாலி இருவரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.