Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடுரோட்டில் மனைவியை கொலை செய்துவிட்டு, போலீஸ் வருகைக்காக காத்திருந்த கணவன்!

On October 13, 2024
WhatsApp Image 2024-10-12 at 23.52.44
Share
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் மீரா ரோடு அருகே நயா நகர் காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே பட்டப்பகலில் நடுரோட்டில் மனைவியின் தொண்டையை கத்தியால் அறுத்து கொலைச் செய்த கணவன் அடுத்த சில நிமிடங்களில் போலீசாரிடம் சரணடைந்துள்ள சம்பவம் பதற செய்கிறது. இது குறித்து போலீசாரின் கூற்றுப்படி, உயிரிழந்த இளம்பெண் அம்ரீன் நதீம் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கணவர் நதீம் அகமது கானுடன் திருமண தகராறு நீடித்து வந்த நிலையில், குடும்ப வன்முறை மற்றும் அவர்களது இரண்டு வயது மகனை யார் பராமரிப்பில் வைத்துக் கொள்வது என்பது தொடர்பாக பிரிந்த தம்பதியினருக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. தனது கணவரிடமிருந்து விலகியிருந்த அம்ரீன், தனது மைனர் மகனின் இயற்கைப் பாதுகாவலராக தன்னை நியமிக்க கோரி, 1980ம் ஆண்டு பாதுகாவலர்கள் மற்றும் வார்டுகள் சட்டம், 1980ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், தானே மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனைவியின் வேலை, வசதி மற்றும் கவனிப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட நீதிபதி தனது உத்தரவில், குழந்தையின் பாதுகாப்பை தாய்க்கு வழங்கினார். அதே நேரத்தில் ஒப்படைப்பு செயல்பாட்டில் கணவர் தரப்பினரிடம் இருந்து எந்த தடையும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய போதுமான பாதுகாப்பை வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் கணவரின் தலையீடு குறித்து புகார் தெரிவிப்பதற்காக அம்ரீன் காவல் நிலையம் சென்றிருந்தார். காவல் நிலையத்தில் மூத்த போலீஸ் அதிகாரியை சந்திப்பதற்காக காத்திருப்புப் பகுதியில் அமர்ந்திருந்த அம்ரீனை நான் கவனித்தேன். அம்ரீனிடம் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தாள். அதைத் தொடர்ந்து நான் அவளுக்கு உதவுவதாக உறுதியளித்தேன். இருப்பினும், நான் திரும்பி வந்தபோது அம்ரீன் காவல்நிலையத்தில் இருந்து கிளம்பிவிட்டாள். சில நிமிடங்கள் கழித்து காவல் நிலையத்திற்கு அருகிலேயே இருந்த உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் அம்ரீன் கொடூரமாக கணவனால் தாக்கப்பட்டார் என்பதை அறிந்தேன்" என்றார். https://x.com/fpjindia/status/1844750923505320329?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1844750923505320329%7Ctwgr%5E4d8fdd5b3eaac610651cfce0ec5ebb360134ec4f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F இது குறித்து பேசிய டிஜிபி பிரகாஷ் கெய்க்வாட், "நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பிறகு, குழந்தையைப் பாதுகாப்பதற்காக அந்தப் பெண்ணுக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்கினோம். எங்கள் குழு அவருடைய குடியிருப்பிற்குச் சென்றது. அவரும் குழந்தையும் அப்போது வீட்டில் இல்லாததால், எங்கள் குழு வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருந்தது." காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய பிறகு, அந்தப் பெண் தனது மூத்த மகளை அருகிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சந்திக்கச் சென்றதாகத் தெரிகிறது. அங்கு அவளது கணவர் அவளைத் தாக்கி, கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்துள்ளார். அதன் பின்னர் அவர் அங்கேயே போலீசார் செல்லும் வரையில் காத்திருந்துள்ளார். போலீசாரிடம் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். குழந்தை உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் அஜ்மீருக்குச் சென்றுள்ளதாக கூறிய அம்ரீனின் கணவர் நதீம், தனது கொடூரமான செயலுக்கு எந்த வருத்தமும் இல்லாமல் குற்றத்தை ஒப்புக்கொண்டார்" என்றார்.நதீமைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.