உலகப் பாரம்பரிய சின்னமாகிறது செஞ்சிக்கோட்டை

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாகிறது. இதற்கு முன்னோட்டமாக இந்தக் கோட்டையை ஆய்வு செய்ய வந்திருந்தார் யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜகாம்ஸ் செப்.
இந்த ஆய்வு குறித்து விழுப்புரம் வட்டார வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவனிடம் பேசியபோது:
'மராட்டியத்தின் புகழ் பரப்பிய சத்ரபதி சிவாஜியை பல கோணங்களில் முன்னிலைப்படுத்தத் தொடர் நடவடிக்கைகளை மகாராஷ்டிரா அரசு எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக, மகாராஷ்டிரா, மத்திய அரசுகளின் பரிந்துரையையேற்று யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜகாம்ஸ் செஞ்சி கோட்டையைக் காண வந்திருந்தார்.
செஞ்சி கோட்டையில் இடம் பெற்றிருக்கும் ராஜகிரி கோட்டையின் கீழ், மேல் தளங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அவரிடம் ராஜகிரி, கிருஷ்ணகிரி கோட்டைகளுக்கு இடையே ரோப் கார் வசதி ஏற்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. லீ தனது அறிக்கையை ஓரிரு வாரங்களில் யுனெஸ்கோவிடம் வழங்குவார்.
இதையேற்று, உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் செஞ்சி கோட்டை இடம்பெறலாம். இதற்கான அறிவிப்பு இன்னும் 9 மாத காலத்துக்குள் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது.
இதையேற்று, உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் செஞ்சி கோட்டை இடம்பெறலாம். இதற்கான அறிவிப்பு இன்னும் 9 மாத காலத்துக்குள் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
