நடிப்புக்கு க்ரீன் சிக்னல் காட்டிய நாஞ்சில் சம்பத்..

சமீபத்தில் டி.டி.வி.தினகரன் கட்சியிலிருந்து வெளியேறிய முத்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் அவர்களிடம் 'ஒற்றன் செய்தி' இணையதள ஊடகத்திற்காக தொலைபேசியில் எடுக்கப்பட்ட பிரத்தியேக பேட்டியின் கேள்விகளும், நாஞ்சில் சம்பத்தின் பதில்களும்.
கேள்வி 1: டி.டி.வி தினகரன் கட்சியிலிருந்து வெளிவந்துவிட்டீர்களே, அதைப்பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தலைகளை எண்ணிய தலைவர்களுக்கு மத்தியில் இதயங்களை எண்ணிய தலைவன் அறிஞர் அண்ணா. தற்கால தமிழர்களை பொற்காலத்திற்கு இட்டு செல்வதற்கு வாசல் திறந்து வைத்தது திராவிடம். அந்த திராவிடத்தை அண்ணாவை அலட்சியப்படுத்துவதை என்னாலே அங்கீகரிக்க முடியவில்லை. திராவிடத்தையும் அண்ணாவை அலட்சியப்படுத்திவிட்டு முட்டு கட்சி நடத்த முடியும்மென்று டி.டி.வி.தினகரன் நம்புகிறார், அவருடைய நம்பிக்கைக்கு நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை. உள்ளத்தில் உயிர் இருந்தால்தான் வாக்கில் உண்மை வரும், சும்மா பேசமுடியாது, நான் மனப்பாடம் பண்ணிக்கிட்டு பேசுரவன் கிடையாது. அதனால் உள்ளத்திலே இருக்கிற ஒலிய நான் இன்னொருவருக்காக யாருக்காகவோ காவு கொடுக்க.முடியாது. அதனால திராவிடமும், அண்ணாவும் இல்லாத இடத்துல நான் இருக்க முடியாது.
கேள்வி 2: மாற்று கட்சியில் ஏதாவது சேருவதாக எண்ணம் உண்டா?
வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன். இனி ஒரு கொடி, இனி ஒரு தலைவன் என்பது என்னுடைய அகராதியில் இல்ல.
கேள்வி 3: திரைத்துறையில் நடிக்க போவதாக சொல்லப்படுகிறதே?
என்னுடைய ஆளுமையை புரிந்து கொண்டு யார் என்னை பயன்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு பயன்படுவேன்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் அவர்கள் நம்முடைய கேள்விகளுக்கு பதிலளித்தார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
