நடிகர் விஷால் கொடுத்த கொட்டு!

பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “சகுந்தலாவின் காதலன்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பி.வி.பிரசாத், பிஸ்மயா, வாகை சந்திரசேகர் நடிக்கும் “ “வேலையிலல்லா விவசாயி” படத்தின் துவக்க விழாவும் ஜூலை 9ம் தேதி மாலை சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
விழாவில் முன்னாள் தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பண்ணீர் செல்வம், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கருணாஸ் எம்.எல்.எ, இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் இயக்குனர்கள் மனோஜ்குமார், ஆர்.வி. உதயகுமார், ரவி மரியா, பிரவீன்காந்த், சரவணன், சாய்ரமணி. நடிகர்கள் மன்சூர்அலிகான், ரமணா, உதயா, சௌந்தர்ராஜன், தயாரிப்பாளர்கள் ஜி.கே.ரெட்டி, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், பட்டியல் சேகர் எஸ்.எஸ்.துரைராஜ், சேதுராமன், செந்தில், திருவேங்கடம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவுக்கு நடிகர் விஷால் தான் நடித்த வெற்றி படமான “திமிரு” படத்தில் தோன்றியதை போல் அதே கண்ணாடி அணிந்து வந்தார். அப்படத்தின் அவருடைய பேச்சில் தோன்றும் காட்டம், இன்றைய விழாவில் அவருடைய பேச்சில் இருந்தது குறிப்பிடத்தக்கது. விழாவில் பேசிய நடிகர் விஷால் கூறியதாவது, “இந்த படத்தின் இசை உரிமையை நான் வாங்கி இருக்கிறேன். ஏன் என்றால் நிறைய பேர் படத்தின் இசை உரிமையை வாங்குகிறார்கள். அனால் தயாரிப்பாளருக்கு முழுமையான தொகை வருவதில்லை, குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். சமீபத்தில் ஒரு படத்தின் இசை உரிமையை வாங்க நான் அந்த தயாரிப்பாளரிடம் கேட்டேன், வேறு ஒரு நிறுவனம் அதை விட அதிக விலைக்கு கேட்டார்கள்..இன்னொரு பெரிய நிறுவனம் அதைவிட பெரிய விலைக்கு வாங்கியது.
மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்..சினிமாவை காப்பாற்றுங்கள் ஜி.எஸ்.டி வரிக்கு மேல் இன்னொரு வரியை போட்டு..கஷ்டபடுத்த வேண்டாம். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரும்போது, பார்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், தின்பண்டங்கள் கட்டணம் என அதிக தொகை செலவிட வேண்டி உள்ளது. இவ்வளவு வருமானம் வந்தாலும் தயாரிபாளர்களுக்கு வருமானம் வருவதில்லை. அதை சரி செய்ய வேண்டும்..தியேட்டர்களுக்கு ரசிகர்களை வர வைக்க வழிவகை செய்ய வேண்டும் இதையெல்லாம் சொன்னால் என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும் என்று பேசினார் விஷால்.”
விஷாலின் இந்த பேச்சு அருகில் அமர்ந்திருந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளருக்கும் மற்ற திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தலையில் ஒரு கொட்டு, கொட்டுவதை போல் பேசிவிட்டு அடுத்த நிகழ்ச்சியில் பங்கேற்க கிளம்பிவிட்டார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
