நடிகர் ரமேஷ் திலக் ரேடியோ ஜாக்கியை திருமணம் செய்கிறார்

'சூது கவ்வும்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரமேஷ் திலக். பின்னர் நேரம், 'வாயை மூடி பேசவும்', 'டிமாண்டி காலனி', 'காக்கா முட்டை', 'வேதாளம்', 'ஆண்டவன் கட்டளை', 'ஒரு நாள் கூத்து' ஆகிய படக்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்த இவர் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். ரேடியோ ஜாக்கியாக வேலை செய்யும் காலத்தில் இருந்தே அவருடன் வேலை பார்த்த நவலட்சுமியை காதலித்துவந்தார்.
சினிமாவில் ஜெயித்த பின்பு தான் கல்யாணம் என முடிவுசெய்திருந்தனர். தற்போது அது நிறைவேறியதால் கல்யாணம் செய்துகொள்ள முடிவுசெய்துள்ளனர். வருகிற ஜுன் மாதத்தில் நிச்சயதார்த்தமும், டிசம்பர் மாதம் திருமணமும் நடக்க இருக்கிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
