நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஏற்பாடு!

சசிகலாவின் கணவர் நடராஜன், கடந்த 9 மாதங்களாகவே உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கையும் வெளியிட்டது. அதில், நடராஜன் உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளதாகவும், கடந்த 9 மாதங்களாக கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வரும் அவரது கல்லீரல் தற்போது மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது!
கல்லீரல் இன்டன்சிவ் கேர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பும் ஆகியவை உள்ளதால், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தற்போது அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருச்சியில் மூளைச்சாவு அடைந்த ஒரு வாலிபரின் உடல் உறுப்புகளை, சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு பொருத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
