Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடக்குமா ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல்? என்ன சொல்லப்போகிறது உயர் நீதிமன்றம்??

On October 26, 2017
Madras-High-Court-LL-Size-min
Share
Madras-High-Court-LL-Size-min தமிழகத்தில் சென்னையில் உள்ள ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்காமல் தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க மனுத்தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுடன் சேர்த்து ஆர்.கே.நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சமீபத்தில் அறிவித்திருந்தார். டிசம்பர் இறுதிக்குள் இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சுமார் 46 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்காமல் தேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.