த வெ க வருகையால் கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்யும் திருமாவளவன்

விஜய் புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சி பணியில் தீவிரமான மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பாஜகவையும் திமுகவையும் எதிர்ப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனால் அனைத்துக் கட்சிகளும் அவர்களின் அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் 234 தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களின் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
234 தொகுதியில் உள்ள மாவட்ட செயலாளர்களில் 144 தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களில் எந்த மாற்றமும் இல்லை, 90 மாவட்டச் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார் என்று விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் நீண்ட நாட்களாக மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு குறித்து விவாதித்து வந்தோம்.
இந்த மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு அனைவரது ஒப்புதலோடு அறிவிக்க இருக்கிறோம். தேர்தல் அடிப்படையில் கொண்டு இந்த மாற்றங்களை மேற்கொள்ள உள்ளோம். இது எங்கள் கட்சியை மேலும் வலுப்படுத்தும் அதன்படி ஏற்கனவே உள்ள 144 மாவட்ட செயலாளர்கள் அப்படியே இருப்பார்கள்.மேலும் 90 மாவட்டச் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
