Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் இல்லை: த்ரிஷாவின் தாயார் விளக்கம்

On January 16, 2017
trishamom
Share
trishamomநடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த கருத்தையும் பதிவிடவில்லை என அவரது தாயார் உமா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். ஜல்லக்கட்டு தடைக்கு காரணாமான பீட்டா அமைப்புக்கு நடிகை த்ரிஷா ஆதரவு அளித்து வருவதாக சமூக வலைதளத்தில் அவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதன் காரணாமாக தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து தற்காலிகமாக நடிகை த்ரிஷா வெளியேறினார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன், 'த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் இல்லை, பீட்டா அமைப்பிலும் உறுப்பினாராக இல்லை' என விளக்கமளித்துள்ளார். மேலும் த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து தவறான கருத்துகளை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.