Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தொடரும் கன மழை: நாகை, புதுக்கோட்டையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

On November 2, 2017
xrain555-02-1509628737.jpg.pagespeed.ic_.Tta4hgd-Qs
Share
xrain555-02-1509628737.jpg.pagespeed.ic_.Tta4hgd-Qs கனமழை தொடருவதால் நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதையடுத்து பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை தொடரும் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் மழையும் நீடித்து வருகிறது. இதனிடையே நாகையில் மழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் கனமழை தொடருவதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.