Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்துவாங்கும் கனமழை!

On November 2, 2017
vellore rain
Share
vellore rain சென்னை நகரின் பல இடங்களில் கனமழை மீண்டும் வெளுத்து வாங்குகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை உக்கிரமாக கொட்டி வருகிறது. தொடர் மழையால் சென்னை மற்றும் புறநகர்களில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியே உள்ளன. . இந்த கனமழை சென்னையில் பகலில் ஓய்ந்து இருந்தது. சில மணிநேர இடைவேளைக்குப் பின்னர் சென்னை மற்றும் புறநகர்களில் கருமேகங்கள் சூழத் தொடங்கின. மாலையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராமாபுரம், போரூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. சென்னை புறநகர்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.