Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன் அப்போலோவில் அனுமதி!

On October 4, 2017
Duraimurugan 1
Share

Duraimurugan 1

தி.மு.க.வின்  துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தி.மு.க.வின் முதன்மை செயலாளராக இருந்து வருபவர் துரைமுருகன். உடல் நிலை காரணமாக சமீப காலங்களில் கட்சியின் தலைவர் கருணாநிதி எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் விஷயங்களில் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், தி.மு.க.வின் முதன்மை செயலாளரான துரைமுருகன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக தி.மு.க.வினர் கூறுகையில், முதன்மை செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.