திருச்சியில் வெள்ளம் இரண்டரை வயது குழந்தை பலி !

தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நீர்நிலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த அலெக்ஸ் அவரது மனைவி சந்தியா மற்றும் குழந்தை ஜெனி (இரண்டரை வயது) இவர்கள் மூவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் நேற்று அரியலூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது அரியலுரில் உள்ள விகைகாட்டி நெரிஞ்சிகோரி தரைப்பாலத்தில் செல்லும்போது நிலை தடுமாறியதால் பாலத்தில் இருந்து மூவரும் கீழே விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதைக்கண்ட தீயணைப்பு துறையினர் அலெக்ஸையும், அவரது மனைவி சந்தியாவையும் உயிருடன் மீட்டனர். ஆனால் குழந்தை ஜெனியை 10 மணி நேரமாக தேடி சடலமாக மீட்டதால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
