திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்தார். கண்ணீர் வெள்ளத்தில் தமிழ்நாடு..!

தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் கவலைக்கிடமாக கடந்த சில தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொண்டர்களும் கோபாலபுரம் இல்லத்தில் குவியத்துவங்கியிருக்கிறார்கள். கருணாநிதியின் உறவினர்கள் அடுத்தடுத்து கோபாலபுரம் வரத்துவங்கியதையடுத்து, கண்ணீர் மல்க கோபாலபுரத்தில் திரள்கிறார்கள் தி.மு.க. தொண்டர்கள்.
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவிருந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
