தாத்தா-தந்தை வழியில் பேரன் தரும் ‘கல்கண்டு’..!

ராட்டினம் என்ற படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் அடுத்ததாக மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் தான் ‘கல்கண்டு’. இந்த படத்தில் நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் A.M.நந்தகுமார். இவர் விஜயகாந்த் நடித்த தென்னவன், பிரஷாந்த் நடித்த ஜாம்பவான் போன்றபடங்களை இயக்கியவர்.. இதுதவிர ஜப்பான் மொழியில் ‘டான்சிங் வித் நிஞ்ஜா’ என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.
கஜேசை அறிமுகப் படுத்துவதற்கு முன் இரண்டு மாதங்கள் அவருக்கு நடிப்பு, நடனம், ஸ்டன்ட் ஆகியவை பயிற்சி கொடுத்த பிறகே கேமரா முன் நிற்க வைக்கப்பட்டாராம். கதாநாயகியாக டிம்பிள்சோப்டே அறிமுகமாகிறார். இவர் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வீர சிவாஜியின் படைத்தளபதிகளாக பணியாற்றிய பரம்பரையை சேர்ந்தவர்.
மற்றும் மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், ‘டாடி ஒரு டவுட்’ செந்தில், முத்துராமன், டி.பி.கஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மதன்கார்க்கி, விவேகா, யுகபாரதி,அண்ணாமலை பாடல்களுக்கு கண்ணன் இசையமைக்கிறார்
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
