Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காட்டில் வசிக்கும் மர்மப்பெண்ணை திருமணம் செய்தார் விக்னேஷ்..!

On July 24, 2014
avan aval
Share

தமிழ்சினிமாவில் பல வருடங்களாக நடித்து வந்தாலும் இன்னும் நிலையான ஒரு இடத்தை தக்கவைக்கமுடியாமல் போராடி வருபவர் விக்னேஷ். ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு அவர் நடிக்கும் படத்திற்கு ‘அவன் அவள்’ என்று பெயரிட்டுள்ளனர்.
கதாநாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரகலா இருவரும் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்திற்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா. பாடல்களை சினேகன் எழுதுகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்கிரீஷ் மிர்னாலி.

குற்றம் ஒன்றை செய்துவிட்டு போலீஸிடம் இருந்து தப்பிக்க அடர்ந்த காட்டிற்குள் அடைக்கலமாகும் விக்னேஷுக்கு காட்டில் பெரிய பங்களா ஒன்றில் உள்ள ஒரு பெண் ஒருவருடன் பழக்கமாகிகிறது. அந்த பழக்கம் காதலாக மாறி திருமணமும் நடக்கிறது.. அதற்கு பிறகு ஒருநாள் அவள் காணாமல் போகிறாள்.
யார் அவள் என்ற திகில் கேள்விக்கு விடை சொல்கிறது ‘அவன் அவள்’ திரைக்கதை.

பயங்கர திகில் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படம் தான் தனக்கு கலையுலகில் நல்ல நடிகனாக, நட்சத்திர அந்தஸ்தை பெற்று தரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் விக்னேஷ்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.