Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தாஜ்மகாலை இடிக்கும் முன் சொன்னால் குழந்தைகளுடன் கடைசியாக பார்த்து விடுவேன் : பிரகாஷ் ராஜ் ட்விட்

On October 25, 2017
24-1490344649-prakashraj-90
Share
 , 24-1490344649-prakashraj-90 தாஜ்மகால் குறித்த நடிகர் பிரகாஷ் ராஜின் ட்விட்டர் பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பதிவில் தாஜ்மகாலை இடிக்கும் முன் சொல்லி விடுங்கள். அதற்கு முன் தனது குழந்தைகளை அழைத்து சென்று கடைசியாக ஒருமுறை தாஜ்மகாலை காட்டி விடுகிறேன் என பதிவிட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநில அரசு தனது சுற்றுலா வழிகாட்டி புத்தகத்திலிருந்து தாஜ்மகாலை நீக்கியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  , மேலும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தாஜ்மகாலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரகாஷ் ராஜின் கருத்திற்கு பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனமாக இருப்பதாக பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.