Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிகிச்சை பெற்று வரும் நடராஜன் சில நாட்களில் வீடு திரும்புவார்: டாக்டர் தகவல்

On October 25, 2017
201702032254589953_AIADMK-rule-will-continue-for-next-20-years-Sasikalas_SECVPF
Share

201702032254589953_AIADMK-rule-will-continue-for-next-20-years-Sasikalas_SECVPF

கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட சசிகலாவின் கணவர் நடராஜன் சில நாட்களில் வீடு திரும்புவார் என்று டாக்டர் தெரிவித்துள்ளார். மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன். 74 வயதாகும் இவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. கல்லீரல், சிறுநீரகம், மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால்தான் உயிர் பிழைக்கும் வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விபத்தில் மூளைச்சாவு அடைந்த 19 வயது புதுக்கோட்டை தொழிலாளி கார்த்திகேயனின் கல்லீரல், சிறுநீரகம் பெறப்பட்டு கடந்த 3-ந்தேதி மாற்று அறுவை சிகிச்சை மூலம் நடராஜனுக்கு பொருத்தப்பட்டது. தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவருக்கு மாற்று உடல் உறுப்புகள் பொருந்தி சீராக செயல்பட தொடங்கியது. அதன் செயல்பாடுகளை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்தனர். உடல் நிலை தேறியதைத் தொடர்ந்து 2 வாரத்துக்குப் பின் கடந்த வாரம் சாதாரண வார்டுக்கு நடராஜன் மாற்றப்பட்டார். அவரது உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. செயற்கை சுவாச கருவிகள் எதுவும் இன்றி அவரே இயற்கையாக சுவாசிக்கிறார். இன்னும் சில நாட்களில் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கல்லீரல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் இளங்குமரன் தெரிவித்தார்.  ,  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.