Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழ் தலைவாஸ் நூலிழை வித்தியாசத்தில் தோல்வி!

On August 5, 2017
kapati potti
Share
kapati potti 12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நாக்பூரில் நேற்றிரவு நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாசும், பெங்களூரு புல்சும் (பி பிரிவு) மோதின. தமிழ்தலைவாஸ் அணி 31-32 என்ற புள்ளி கணக்கில் நூலிழை வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ரோகித் குமார் 11 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணியில் கேப்டன் அஜய் தாகூர், பிரபஞ்சன் தலா 6 புள்ளிகளும் எடுத்தனர். இதே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தபாங் டெல்லி-மும்பை (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்- உத்தரபிரதேச யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.