Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர் கருணாநிதி - ராகுல்காந்தி புகழாரம்..!

On December 17, 2018
133563-karunanithi-and-ragulganthi
Share

திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதன்பின் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

கருணாநிதியின் வீடு மிகப்பெரியதாக இருக்கும் என நினைத்துக்கொண்டு அவருடைய வீட்டிற்கு சென்றேன். பல ஆண்டுகளாக அரசியலில் தலைவராக இருப்பவரின் வீடு எளிமையாக இருந்ததை கண்டு வியந்தேன்.

கருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல, அவர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தார்.தமிழக மக்களின் மகிழ்ச்சியையும், வலிமையையும் தன்னுடையதாக கருதியவர் கருணாநிதி.

உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றை மத்திய அரசு சீரழித்துவிட்டது. நாட்டின் கலாச்சாரத்தை, பண்பாட்டை மதிக்க வேண்டியதில்லை என நினைக்கும் அரசு மத்தியில் உள்ளது. இந்தியாவை சீரழிக்கும் இந்த அரசை நீடிக்க வைக்க கூடாது.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.