தமிழக சட்டசபை ஜூன் 14 கூடுகிறது....

தமிழக சட்டசபை பொறுப்பு செயலாளர் பூபதி அவர்கள் தமிழக சட்டசபை கூட்டம் ஜூன் 14 ம் தேதி கூடுகிறது என அறிவித்துள்ளார்.
ஜூன் 14ம் தேதியன்று காலை 10 மணிக்கு கூடும் இக்கூட்டத்தில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் நடந்த தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பட்ஜெட் மீதான விவாதம் மட்டுமே நடந்தது. பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது. இதனால் ஜூன் 14ம் தேதி கூடும் கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் என கூறப்படுகிறது.
சட்டசபை அலுவல் கூட்டத்திற்கு பிறகு இந்த கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என முடிவு செய்யப்பட உள்ளது. அனேகமாக 30 முதல் 35 நாட்கள் வரை இக்கூட்டம் நடக்கலாம். இந்த கூட்டத்தின் போது நாள்தோறும் ஒவ்வொரு துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும். அதன் பிறகு நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
