தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழையா!

ஆந்திர கடலோரம் முதல் குமரிக்கடல் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. மேலும் மேற்கு நோக்கி வீசும் காற்று வலுப்பெற்றுள்ளது. வெப்பச்சலனமும் உள்ளது. இத்தகைய காரணங்களால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதுபோல மழை இன்னும் 4 நாட்களுக்கு இருக்கும். எந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று கூறமுடியாது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
